தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

News image

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள். - சித்திரிப்பு / விஜய்

Updated On :25 ஜூன் 2026, 8:16 pm IST

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1பிளாஸ்ட்

Listicle image

நடிகர்கள் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது

அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்சன் பாணியில் எடுக்கப்பட்ட பிளாஸ்ட் திரைப்படம், கடந்த மே 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

2லிங்கம்

Listicle image

நடிகர் கதிர் கதாநாயகனாக நடித்துள்ள லிங்கம் இணையத் தொடர் நாளை(ஜூன் 26) நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

எழுத்தாளர் லட்சுமி சரவணக்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இணையத் தொடரான லிங்கம், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

3மம்பட்டியான் ஸ்டார்ஸ்

Listicle image

கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெற முயலும் 3 நண்பர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர் மம்பட்டியான் ஸ்டார்ஸ்

இதில் வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் நாளை ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

4மூன்றாம் கண்

Listicle image

நடிகர்கள் விதார்த், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மூன்றாம் கண்.

இந்தத் திரைப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

5முத்தாஸி (Muthassi)

Listicle image

மலையாள மொழியில் உருவாகியிருக்கும் கிரைம் திரில்லர் இணையத் தொடர் முத்தாஸி

இந்தத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.

6கடந்த வார ஓடிடி (திரிஷ்யம் - 3)

Listicle image

நடிகர் மோகன் லால் நாயகனாக நடித்து வெளியான திரிஷ்யம் - 3 திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

முந்தைய பாகங்களில் நடித்த மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத் ஆகியோர் மூன்றாம் பாகத்திலும் நடித்துள்ளனர்.

7அதிரடி

Listicle image

மலையாள சினிமாவில் பன்முகத்தன்மை கொண்ட திரைக்கலைஞரான பாசில் ஜோசஃப் தன் தயாரிப்பு நிறுவனத்தில் அதிரடி படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தினை அருண் அனிருதன் எழுதி இயக்க, நடிகர்கள் பாசில் ஜோசஃப், டொவினோ தாமஸ், ரியா ஷிபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சோனி லைவ் ஓடிடியில் பார்க்கலாம்.

8கெணத்த காணோம்

Listicle image

நடிகர் யோகி பாபுவின் கெணத்த காணோம் திரைப்படம், ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

இந்தப் படத்தில் யோகி பாபு, கோயில் பூசாரியாக நடித்துள்ளார். மேலும் லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், கவிதா பாரதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

9ஐ வில் ஃபைண்ட் யூ (I WILL FIND U)

Listicle image

மகனைக் கண்டறியும் தந்தையின் கதையாக, திரில்லர் பாணியில் ஐ வில் ஃபைண்ட் யூ இணையத் தொடர் எடுக்கப்பட்டுளது.

இந்தத் தொடரை ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் காணலாம்.

10ஹஸ்பண்ட்ஸ் இன் ஆக்‌ஷன் (Husbands In Action)

Listicle image

அதிரடி கலந்து நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள தென்கொரிய திரைப்படம் ஹஸ்பண்ட்ஸ் இன் ஆக்‌ஷன்.

இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கொரியன், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நாளை வெளியாகிறது.

Summary

Let's take a look at which movies are releasing on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.