காந்தி சமாதி நோக்கி பேரணி சென்ற ராகுல் தடுத்து நிறுத்தம்!மேக்கேதாட்டு பிரச்னை: விஜய் மௌனம் கலைக்க வேண்டும்! - ஸ்டாலின்நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்!சிங்கை ஜி. ராமச்சந்திரன் அதிமுகவிலிருந்து விலகல்திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்
/

கான் சிட்டி! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 24 - 30)

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

News image

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! - சித்திரிப்பு / விஜய்

Updated On :23 ஜூலை 2026, 6:55 pm IST

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1கான் சிட்டி

Listicle image

பவர்ஹவுஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக அர்ஜுன் தாஸ் நாயகனாகவும் அன்னா பென் நாயகியாகவும் நடித்த கான் சிட்டி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நாளை(ஜூலை 24) வெளியாகிறது.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்க, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.

2பள்ளிச்சட்டம்பி

Listicle image

மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் வெளியான திரைப்படம் பள்ளிச்சட்டம்பி. நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

3ஈகோ ராமன்

Listicle image

கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஈகோ ராமன்.

இந்தத் திரைப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது

4மைலாஞ்சி

Listicle image

அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த், சிங்கம்புலி, தங்கதுரை உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மைலாஞ்சி.

இந்தத் திரைப்படம் ஆஹா ஓடிடியில் நாளை வெளியாகயிருக்கிறது.

5சீக்ரெட் ஆப் கலிங்கா

Listicle image

சனீஷ் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன், அல்டாப் சலீம், ரியாஸ் கான், மாளவிகா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சீக்ரெட் ஆஃப் கலிங்கா.

நகைச்சுவை, திகில் மற்றும் மர்மம் கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

6கடந்த வார ஓடிடி (மா இண்டி பங்காரம்)

Listicle image

சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

சமந்தா கணவர் ராஜ் நிதிமோர் உருவாக்கத்தில் இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கியிருந்தார். சமந்தாவுக்கு கோலிவுட்டிலும் மார்கெட் இருப்பதால் தமிழிலும் டப் செய்து 'எங்கள் தங்கம்' என்ற பெயரில் படம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

7பவித்ரம் சீசன் 2

Listicle image

நடிகை சுரபி பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள பவித்ரம் இணையத் தொடரின் 2 ஆம் பாகம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

கர்ப்பிணியான வேதா(சுரபி), தனது கணவர் விக்ரமுக்கு(ஸ்ரீகாந்த் சசிகுமார்) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தில்லியில் தலைமறைவாக வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

மருத்துவமனையில் உள்ள நம்பிக்கைக்குரிய நண்பர்களின் உதவியுடன், தனது குழந்தையைப் பெற்றெடுக்க, எதிரிகளிடமிருந்து வரும் ஆபத்தான சவால்களை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.

8மதுராபுரி சாதனா

Listicle image

சுயமாக சம்பாதித்து வீடுகட்ட நினைக்கும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் கதையாக மதுராபுரி சாதனா படம் எடுக்கப்பட்டுள்ளது.

சாய் தருண் ரெட்டி இயக்கத்தில் பரத் சாய்நாத் வர்மா, யாஷு மாஷெட்டி நடிப்பில் வெளியான இந்தப் படத்தை ஈடிவி வின் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

9தி டெவில்

Listicle image

தனது மகனை முதல்வர் அரியணையில் அமர்த்த போராடும் முதல்வரின் கதையாக, அதிரடி மற்றும் த்ரில்லர் பாணியில், தி டெவில் படம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரகாஷ் இயக்கத்தில் தர்ஷன், ரச்சனா ராய், மகேஷ் மஞ்ச்ரேக்கர், அச்சுத் குமார், ஷர்மிளா மாண்ட்ரே, ரோஜர் நாராயண் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஜீ5 தளத்தில் காணலாம்.

10கொத்தப்பள்ளிலோ ஒக்காப்புடு

Listicle image

பிரவீணா பருச்சூரி இயக்கத்தில் மனோஜ் சந்திரா, மோனிகா, உஷா போனேலா, ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் கொத்தப்பள்ளிலோ ஒக்காப்புடு.

இந்தத் திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

Summary

Let’s take a look at which movies and web series are set to release on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.