தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு!அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 24 மாவட்டங்களில் மழை!திருவண்ணாமலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறைவிழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவிலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

நாய் சேகர் இயக்குநரின் கோயம்பத்தூர் மாப்பிள்ளை: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கோயம்பத்தூர் மாப்பிள்ளை படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து...

kishore rajkumar

கோயம்பத்தூர் மாப்பிள்ளை படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்

Updated On :

'நாய் சேகர்' இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான கோயம்பத்தூர் மாப்பிள்ளை' திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ‍பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரித்துள்ள 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' திரைப்படத்தை 'கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகையும் 'கொட்டுக்காளி' தமிழ் படத்தில் நடித்தவருமான‌ அன்னா பென் நாயகியாக நடிக்க, கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சித்தப்பு சரவணன், விநோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகரன், மோனிஷா பிளஸ்ஸி, வாட்ஸப் மணி, நக்கலைட்ஸ் ரஞ்சித் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான‌ கோயம்பத்தூர் மாப்பிள்ளை திரைப்படம் டிச. 24 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநரும் நாயகனுமான கிஷோர் ராஜ்குமார், "வெறும் 29 நாள்களில் 'கோயம்பத்தூர் மாப்பிள்ளை' படப்பிடிப்பை முடித்துள்ளோம். குண்டாக இருப்பவர்களை நகைச்சுவை வேடங்களில் சித்தரித்து நிறைய படங்கள் வந்துள்ள நிலையில், உடல் எடை அதிகமாகக் கொண்ட பாத்திரத்தை நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது.

அந்த வேடத்தில் நானே நடிப்பது மகிழ்ச்சி. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வைகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது, தொடக்கம் முதல் இறுதி வரை கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்த திரைப்படம் இருக்கும்," என்று தெரிவித்தார்.

Summary

The release date of the film 'Coimbatore Mappillai', written, directed and starring 'Nai Shekhar' director Kishore Rajkumar, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.