
உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட அங்கீகாரம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
அங்கீகாரம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...

அங்கீகாரம் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ்
உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள அங்கீகாரம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் தென்பாதியான் இயக்கத்தில் கே.ஜே.ஆர். ராஜேஷ் நடித்து வெளியான திரைப்படம் அங்கீகாரம். இப்படத்தை ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
மேலும் இந்தப் படத்தில் சிந்தூரி விஸ்வநாத், வசுந்தரா, ரங்கராஜ் பாண்டே, விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, ஆண்டனி, மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அரசு வழக்குரைஞராக நடித்துள்ள விஜி வெங்கடேஷின் நடிப்பும் நாயகனின் தாயாக வரும் நடிகை ரமாவின் நடிப்பு பெரிதாகப் பாராட்டப்பட்டது.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார்.
இந்த திரைப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
இந்தத் திரைப்படம் விளையாட்டுத் துறையில் நடக்கும் அரசியல், எளிய விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை எப்படி நாசமாக்குகிறது என்பதை பேசியிருக்கிறது.
இந்த நிலையில், அங்கீகாரம் திரைப்படம் செப். 18 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Summary
The OTT release date for the film Angikaram, which is based on true events and centered around athletics, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






