
மோகன்லால் மகளின் துடக்கம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
துடக்கம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

துடக்கம் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்
நடிகர் மோகன்லாலின் மகள் விஸ்மயா நாயகியாக அறிமுகமான துடக்கம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும், துடக்கம் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமாகியுள்ளார்.
2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப், துடக்கம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஒரு சாதாரண பெண்ணான நாயகியின் (விஸ்மயா) அமைதியான வாழ்க்கையில், மர்மமான நபரால் ஏற்படும் ஆபத்துகளும், அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுமே படத்தின் கதை.

சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாக உருவான இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.
கடந்த ஆக. 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், துடக்கம் திரைப்படம் செப். 18 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Summary
The OTT release date for the film Thudakkam, marking the debut of actor Mohanlal's daughter Vismaya as a lead actress, has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





