முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மேயர் பிரியா ஆய்வு!எஸ்பிஐ வங்கியின் 3.75 லட்சம் தரவுகள் திருட்டு! ‘டார்க் வெப்’பில் வெளியீடு! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 குறைந்தது!காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!சென்னையில் விடியவிடிய மழை! மீனம்பாக்கத்தில் 129 மி.மீ. பதிவு! தமிழகம் அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது!சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று(அக்.21) விடுமுறை

மம்மூட்டி நடித்த பாதயாத்ரா வெளியீட்டுத் தேதி!

பாதயாத்ரா வெளியீட்டுத் தேதி...

மம்மூட்டி

Updated On :

நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ள பாதயாத்ரா திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைப்படங்களை இயக்கி இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் இயக்கிய படங்களில் அனந்தரம், மதிலுகள், விதேயன் ஆகிய திரைப்படங்களில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற அடூர் கோபாலகிருஷ்ணன் இறுதியாக 2016-ல் பின்னேயும் என்கிற மலையாள திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது, 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து பாதயாத்ரா என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மம்மூட்டியே தயாரித்த இப்படத்தில் அவரே நாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் இந்திரன்ஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Story image

மலை கிராமத்தில் மருத்துவராக இருக்கும் மம்மூட்டிக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையேயான உறவைப் பேசும் படமாக இது உருவாகியிருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், இப்படத்தை வருகிற டிச. 4 ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

The release date of the film Padayatra, starring actor Mammootty in the lead role, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.