
தனுஷ், மம்மூட்டியின் ஓம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி!
நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி குறித்து...

ஓம் திரைப்படத்தில் தனுஷ், மம்மூட்டி - படம்: எக்ஸ் / வுன்டர்பார் ஃபிலிம்ஸ்
நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி குறித்து...
நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ஓம் என பெயரிட்டுள்ள இந்தப் படத்தைத் தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.
வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம், அக்டோபர் 16 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாடலான அலாக்கா லோவா பாடலை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைப்பில் ரோகேஷ் எழுதிய இப்பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தப் படம் அக். 16 ஆம் தேதி வெளியாகவிருந்தது. பின்னர் ரஜினி, சூர்யா படங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தப் படம் வரும் நவ.20ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
The Day for the Ultimate Strike is Here ð¥#OM Hits theatres worldwide on November 20, 2026.
— Wunderbar Films (@wunderbarfilms) October 2, 2026
A @Rajkumar_KP Film.@dhanushkraja @mammukka @Sai_Pallavi92 @RTakeStudios @wunderbarfilms @SaiAbhyankkar #NaseeruddinShah @sreeleela14 @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr⦠pic.twitter.com/I5GBoL4HJT
Summary
New release date for the Dhanush-Mammootty film 'Om'!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







