மருது சகோதரர்களுக்கு வீரவணக்கம்: முதல்வர் விஜய்சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு!கனமழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!கனமழை: நீலகிரியில் 6 தாலுகாக்களில் இன்று (அக். 24) பள்ளிகளுக்கு விடுமுறை!தமிழகத்தில் இரு நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை! அக். 26-இல் புயல் உருவாக வாய்ப்பு!கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 9,000 கோடி திரட்டுகிறது தமிழக அரசு!அருணாசல் எல்லையில் ரோந்துப் பாதைகளை சீன படைகள் பின்பற்றாததால் பதற்றம்: இந்தியாபாகிஸ்தானில் இந்திய ஆதரவு பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ராணுவ தலைமைத் தளபதி முனீா்!ரூ. 84,084 கோடிக்கு ‘சமுத்ர மந்தன்’ திட்டம்: கடலுக்கு அடியில் எண்ணெய், எரிவாயு தேட வழிகாட்டுதல்கள் வெளியீடு

கத்தியால் குத்தி இளைஞர் கொலை

அம்பத்தூரில் முன்விரோதம் காரணமாக இளைஞரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On :

அம்பத்தூரில் முன்விரோதம் காரணமாக இளைஞரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 அயப்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கமல்ராஜ் (28). காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
 இவர் தனது நண்பர் ஆனந்துடன் சேர்ந்து திங்கள்கிழமை மாலை அம்பத்தூர் எம்.ஜி.ஆர் புரத்தில் உள்ள அரசு மதுக்கடையில் மது அருந்திவிட்டு கடை அருகே இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
 அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், கமல்ராஜை சரமாரியாகக் கத்தியால் குத்தினர். இதில், அவர் பலத்த காயம் அடைந்தார். அதைக் கண்டதும் ஆனந்த் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
 பின்னர் இரு மர்ம நபர்களும் கமல்ராஜின் இரு சக்கர வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
 தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் அங்கு சென்று கமல்ராஜை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
 இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கர்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.