தமிழக பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு இரட்டை வெள்ளி! கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு ஹாட்ரிக் பதக்கம்: தமிழக அரசின் ரூ. 1.75 கோடி ஊக்கத்தொகையைப் பெறும் துளசிமதி முருகேசன்! வாழப்பாடி அருகே முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் கேரளத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் பதவியேற்பு!தேர்தல் ஆணைய அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு!

திருட்டு சி.டி.க்கள் பறிமுதல்: இளைஞர் கைது

சென்னையில் திருட்டு சி.டி. தயாரித்து விற்றதாக, இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 3,000 திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On :

சென்னையில் திருட்டு சி.டி. தயாரித்து விற்றதாக, இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 3,000 திருட்டு சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாதவரம் டெலிபோன் காலனியைச் சேர்ந்த ப.நிர்மல்குமார் (30) திருட்டு சி.டி. தயாரித்து விற்பதாக, சென்னை பெருநகர காவல் துறையின் திருட்டு சி.டி. தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர்.

இந்நிலையில், பாரிமுனை பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நிர்மல்குமாரை பிடித்து போலீஸார் விசாரணை செய்ததில், அவர் திருட்டு சி.டி.க்களை பர்மா பஜார், ரத்தன் பஜார் ஆகிய பகுதிகளில் விற்பதற்காக கொண்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் வைத்திருந்த திருட்டு சி.டி.க்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில், கொடுங்கையூர் வெங்கடேஸ்வராநகர் செல்வ விநாயகர் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் திருட்டு சி.டி. தயாரித்து பர்மா பஜார், ரத்தன் பஜார் ஆகிய பகுதிகளில் விற்று வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார், அந்த வீட்டில் சோதனை செய்து, அங்கிருந்து தமிழ் புதிய திரைப்படங்களான "தனி ஒருவன்', "தாக்க தாக்க', "யட்சன்',"மாயா',"பாயும்புலி',ஆங்கில திரைப்படங்களின் 3,606 திருட்டு சி.டி.க்களை பறிமுதல் செய்தனர். மேலும், திருட்டு சி.டி. தயாரிக்க பயன்படுத்திய 12 கணினிகளையும் போலீஸார் கைப்பற்றினர்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், நிர்மல்குமாரை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.