தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

மதுவிலக்கு, இலங்கை மீது விசாரணை: சென்னையில் தமாகா உண்ணாவிரதம்

தமிழகத்தில் மதுவிலக்கு, இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Published On :

தமிழகத்தில் மதுவிலக்கு, இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமான கட்சியினர் பங்கேற்றனர். அதில், ஜி.கே.வாசன் பேசியதாவது:

மதுவினால் நாடும், வீடும் சீரழிகிறது. அதுவே சமூக விரோதச் செயல்களுக்கு காரணமாக அமைகிறது. மாணவர்களும், இளம் பெண்களும் மதுவுக்கு அடிமையாகி வருவது வேதனைக்குரியது. ஒட்டுமொத்த தமிழகத்தின் வளர்ச்சியும் இதனால் தடைபடுகிறது. தமிழக மக்களின் வாழ்வை பாதுகாக்க பூரண மதுவிலக்கை படிப்படியாக அறிவிக்க வேண்டும்.

மீனவர்கள் பிரச்னை: தமிழக மீனவர்கள் தெரியாமல் எல்லை தாண்டிச் செல்லும் போது இலங்கை கடற்படை சுடுவதும், கொடுமைப்படுத்துவதும் ஏற்புடையது அல்ல. மத்திய அரசு இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைப் போரில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். இதற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் ஜி.கே.வாசன்.

உண்ணாவிரதத்தில் கட்சியின் நிர்வாகிகளான ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், கோவை தங்கம், விடியல் சேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.