வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடன் தொல்லை: மெக்கானிக் தற்கொலை

சென்னை பெரம்பூரில் கடன் தொல்லையின் காரணமாக மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Updated On :

சென்னை பெரம்பூரில் கடன் தொல்லையின் காரணமாக மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர் வடிவேல் தெருவைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (28). இவர் மனைவி கவிதா. நரேஷ் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நரேஷ் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் இருந்தார். அப்போது கவிதா, வீட்டுக்குத் தேவையான சில பொருள்களை வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றார்.

சிறிது நேரத்துக்கு பின்னர், அவர் திரும்பி வந்தார். நரேஷ்குமார் அவர் அறையில் தூக்கிட்டு இறந்து கிடப்பதைப் பார்த்து கவிதா அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த செம்பியம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, நரேஷ்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கினர். போலீஸார் நடத்திய விசாரணையில், நரேஷ் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததும், அந்தக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால்,கடன் கொடுத்தவர்கள் நரேஷுக்கு நெருக்கடி கொடுத்ததும் தெரியவந்தது.

இந்த நெருக்கடியின் காரணமாகவே நரேஷ்குமார் தற்கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.