திரு.வி.க. நகர் தொகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் அருந்ததியர் குடியிருப்பில் நிலவும் சுகாதாரமற்ற நிலைமைகளால், மலேரியா, அம்மை போன்ற தொற்றுநோய்கள் வேகமாகப் பரவி வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 50 பேர் அம்மை நோயாலும், 30 பேர் மலேரியா நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குடியிருப்பில் சுமார் 6000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முறையான குடிநீர் வசதியும் இல்லை. சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வருகின்ற குடிநீர், கழிவு நீருடன் கலந்து மஞ்சள் நிறமாக வருகிறது. கழிவுநீர் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.
குடியிருப்பு எங்கிலும் தேங்கியுள்ள குப்பை கூளங்களால் கொசுக்களின் பெருக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் மலேரியாவின் கடுமையான பாதிப்புக்கு அவர்கள் உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் அருந்ததியர் குடியிருப்பு பெண்கள் நலச் சங்கத் தலைவர் எம்.எஸ்.லாவண்யா கூறியதாவது:- தேர்தல் நெருங்கும்போது மட்டும்தான் அரசியல்வாதிகள் இங்கே வருகிறார்கள். கடந்த தேர்தலுக்கு ஓட்டுக் கேட்க வந்தார்கள். அதன் பிறகு யாரும் வரவில்லை. குடிநீர் பிரச்னையைத் தீர்க்குமாறு எத்தனையோ முறை வேண்டுகோள் விடுத்தோம். எதையுமே நிறைவேற்றவில்லை. எங்களை அரசியல்வாதிகள் சக மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை.
குடிநீர் பிரச்னை, சுகாதாரப் பிரச்னைக்குத் தீர்வு காண உறுதி கொடுப்பவருக்கே வாக்களிப்போம் என்றார்.
-அருளினியன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கட்டாய மத மாற்றத்தை பயங்கரவாத செயலாக அறிவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழகத்தில் ஒருநாள்கூட நிம்மதியாக விடியவில்லை: அண்ணாமலை
வீரவநல்லூா் நகைக்கடை திருட்டு வழக்கில் மேலும் இருவா் கைது

ஆலங்குளம் திமுக வேட்பாளருக்கு முஸ்லிம் லீக் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

