கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சவால்கள் நிறைந்த மெட்ரோ ரயில் சுரங்கப் பணி நடந்தது எப்படி

சென்னை மெட்ரோ ரயில் பணியின் மைல் கல்லாக கோயம்பேடு - நேரு பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படவுள்ளது

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:17 pm

ஆர்.ஜி. ஜெகதீஷ்

சென்னை மெட்ரோ ரயில் பணியின் மைல் கல்லாக கோயம்பேடு - நேரு பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்து இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்தியாவிலேயே மிக சவாலான மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் சென்னையில் மட்டுமே நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சென்னையில் அதிகப்படியான பாறைகள் இருந்ததால் மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கும் பணி மிகக் கடுமையானதாகவே இருந்தது என்று பணியாற்றிய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அண்மையில் அண்ணா சாலையில் ஏற்பட்ட விரிசல்கள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தின. ஆனால் இதுபோன்ற பள்ளங்களும், விரிசல்களும் சுரங்கப் பணியின்போது ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் இதனால் உயிரிழப்பு, பொருள் சேதமும் ஏற்படாது என பொறியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

எப்படி சுரங்கப் பணி நடைபெற்றது? சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியில் 12 ராட்சத டனல் போரிங் இயந்திரங்கள் ஈடுபட்டன. பிரான்ஸ், சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இந்த சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டன.

சாலைக்குக் கீழே சுமார் 20 மீட்டருக்கு கீழே ரயில் பாதை அமைக்கப்படுகிறது. சாலை மட்டத்திலிருந்து 17 மீட்டருக்கு கீழே சுரங்கம் தோண்டப்படுகிறது. 6.2 மீட்டர் விட்டம் கொண்டதாக இந்தச் சுரங்க ரயில் பாதை அமைகிறது.

மேலும், 6.2 மீட்டர் விட்டத்தில் சுரங்கப் பாதை அமைவதால், அந்தப் பாதையிலிருந்து, தரைப் பகுதி 10 அடி உயரத்துக்கு மேல்தான் இருக்கும். இதனால், குடிநீர்க் குழாய்கள், கழிவுநீர்க் குழாய்களுக்கு பாதிப்பு இருக்காது. ஒரு நாளைக்கு 5 முதல் 6 மீட்டர் தூரம் வரை சுரங்கம் தோண்டப்பட்டது. டனல் போரிங் இயந்திரத்தின் முன்புறம் உள்ள கூர்மையான பிளேடுகள் சுரங்கத்தை தோண்டும். சுரங்கத்தை தோண்டிக்கொண்டே சிமென்ட் கலவைகள் மூலம் வட்டமாக வழி ஏற்படுத்தும். சுரங்கம் தோண்டுவதால் வெளியேறும் மண் குவியல்கள் இயந்திரத்தில் உள்ள கன்வயர் பெல்ட் மூலம் வெளியே அனுப்பப்படும். பின்பு, லாரிகள் மூலம் சென்னைக்கு வெளியே மண் கழிவுகள் கொண்டு செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்படும்.

சென்னையிலேயே சவாலாக இருந்தது நேரு பூங்கா - எழும்பூர் இடையிலான சுரங்கப் பாதை மட்டுமே. இந்தப் பகுதியில் அதிகமான பாறைகள் இருந்ததால் கடினமான சேதங்களை டனல் போரிங் இயந்திரம் சந்தித்தது. கிட்டத்தட்ட 2012 ஆம் ஆண்டில் சுரங்கப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டுதான் முடிவுற்றன.

முழுமையான பணிகள்: சென்னை மெட்ரோ ரயிலில் இரண்டாவது வழித்தடத்தில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம் என 9 ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 19 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டன.

850 கட்டடங்கள்: வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் இடையேயான சுரங்க ரயில் பாதை மிகவும் சிக்கலானதாகும். இந்தப் பகுதிகளில் பழைய கட்டடங்கள் இருந்ததால், அவ்வப்போது பல பிரச்னைகளைக் கடந்து இந்தப் பணிகளும் இப்போது நிறைவு பெற்றுள்ளன. வண்ணாரப்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையே மட்டும் கிட்டத்தட்ட 850 கட்டடங்களைத் தாண்டி இந்தச் சுரங்கப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

ராட்சத மின் விசிறிகள்: சுரங்க ரயில் நிலையங்களுக்கு தலா 4 ராட்சத மின்விசிறிகள் மூலம் காற்றோட்டம் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த ராட்சத மின்விசிறிகள், வெளியே இருந்து உள்ளே காற்றை இழுத்து உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றுகின்றன.
கண்ணாடி அறைக்குள் ரயில்: சுரங்க ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில் வந்து நிற்கும்போது கண்ணாடி அறைக்குள்ளே வருவதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பயணிகள் யாரும் அத்துமீறி சுரங்க தண்டவாளத்தில் நுழைந்து விடாமல் தடுக்கப்படும். சுரங்க ரயில் நிலையத்தில் மெட்ரோ ரயில் நிற்கும்போது ரயிலின் கதவு திறக்கும் அதேநேரத்தில் கண்ணாடி கதவுகளும் திறக்கும். ரயிலின் கதவுகள் மூடிய பின்பு கண்ணாடி கதவுகளும் மூடிக்கொள்ளும். இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

பாதுகாப்பு வழி: மெட்ரோ ரயில் சுரங்கத்தில் ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியிலும் பாதுகாப்பு நுழைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலைய சுரங்கத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெட்ரோ ரயில் நிறுத்தப்படும். பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி சுரங்கத்தில் இருக்கும் பாதுகாப்பு நுழைவில் சென்று வெளியே செல்லும் வகையில் இந்த வழி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நுழைவு அருகில் இருக்கும் அடுத்த மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.