கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பணத் தகராறில் தொழிலதிபர் கடத்தல்: 4 பேர் கைது

சென்னை மண்ணடியில் பணத் தகராறில் தொழிலதிபரை கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:15 pm

DIN

சென்னை மண்ணடியில் பணத் தகராறில் தொழிலதிபரை கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி, மேலப்பாளையம் மங்களப்பா நகர் 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ந.சையது முகமது புஹாரி (28). 
இவர் தொழில் தேவைக்காக தென்காசி நடுப்பேட்டையைச் சேர்ந்த க.சாகுல் அமீது (37) என்பவரிடம் சில மாதங்களுக்கு முன்பு ரூ. 40 லட்சம் கடன் வாங்கினாராம். இதன் பின்னர் புஹாரி ரூ. 4 லட்சத்தை சாகுல்அமீதுவிடம் திரும்பக் கொடுத்தாராம். ஆனால் மீதிப் பணத்தை கொடுக்காமல் புஹாரி இழுத்தடித்து ஏமாற்றி வந்தாராம்.
இந்நிலையில் புஹாரி கடந்த 26-ஆம் தேதி மண்ணடியில் நடந்து வந்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சாகுல் அமீது, அவரது கூட்டாளிகள் செங்குன்றத்தைச் சேர்ந்த அ.சையது அலிம் புஹாரி (37), மேலப்பாளையத்தைச் சேர்ந்த சா.காஜா நிஜாமுதீன் (44), திருநெல்வேலியைச் சேர்ந்த சை.ஹீரா (32) ஆகியோர் முகமது புஹாரியை கடத்தி, திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அடைத்து வைத்து பணத்தை கேட்டு சித்ரவதை செய்து வந்தனராம்.
இதற்கிடையே, அவர்களிடமிருந்து தப்பி வந்த முகமது புஹாரி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். 
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சாகுல் அமீதுவையும், அவரது கூட்டாளிகள் 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.