மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுவரவில் நல்வரவு: "எது கல்வி?'

உலகமயமாக்கல், அதனைத் தொடர்ந்த நுகர்வு கலாசாரம் ஆகியவை மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கண்கூடான உண்மை.

News image
Updated On :8 ஜனவரி 2017, 10:00 pm

ஆச்சா

உலகமயமாக்கல், அதனைத் தொடர்ந்த நுகர்வு கலாசாரம் ஆகியவை மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் கண்கூடான உண்மை. இதன் நீட்சியாக உலக நிறுவனங்களுக்கு வேலையாட்கள் தேவை, அதற்கான கல்வி முறை என்ற ரீதியில் கல்வி சுருங்கியுள்ளது.
மாணவர்களிடம் எந்தவித திறமை இருந்தாலும், மதிப்பெண்ணை மட்டுமே முக்கியமானதாக நிலைநிறுத்தும் சூழலில், பல மாணவர்களின் இயல்பான திறன்கள் கண்டுகொள்ளப்படாமலேயே போய்விடுகின்றன. கல்வி, அறிவுக்கானது என்ற நிலைமாறி வேலைக்கானது என்று சுருங்கியுள்ளது. இதன் பாதிப்பாக கல்வியும் நுகர்வுப் பொருளாக மாற்றப்பட்டுள்ளது. அதனாலேயே தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் பெருகியுள்ளன என்பது நிதர்சனம்.
இந்த நிலையில், கல்வி என்றால் என்ன, அது எப்படி இருக்க வேண்டும் என்று ஆய்வு செய்து பல கட்டுரைகள் எழுதியுள்ளார் ஆசிரியர் இரா. எட்வின். "தினமணி டாட் காம்' தளத்தில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்த கல்வி தொடர்பான அவரது கட்டுரைகளை தொகுத்து "எது கல்வி?' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது நற்றிணை பதிப்பகம்.
விளையாட்டு வீரனை, நல்ல படைப்பாளியை, நல்ல நடிகனை, நல்ல பேச்சாளனை, நல்ல கவிஞனை, நல்ல சமூகப் போராளியை, நல்ல தலைவனை உருவாக்கித் தரவேண்டியது பள்ளியின் கடமை என்பது போன்ற பல கருத்துகளை நூல் முழுவதும் ஆழமாக நிரப்பி, கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது இந்த நூல்.
இந்தாண்டு புத்தகக் காட்சிக்கு வரும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினராலும் விரும்பி வாங்கப்படும் புதுவரவு நூல்களில் ஒன்றாக மாறியுள்ளது "எது கல்வி?'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.