பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

லாஸ் ஏஞ்சலீஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படும் மம்மூட்டி - மோகன்லாலின் பேட்ரியாட்!

மம்மூட்டி - மோகன்லால் நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம் குறித்து...

IFFLA logo, Patriot poster.

ஐஎஃப்எஃப்எல்ஏ இலச்சினை, பேட்ரியாட் போஸ்டர். - படங்கள்: எக்ஸ் / ஐஎஃப்எஃப்எல்ஏ, மம்மூட்டி.

Published On :

லாஸ் ஏஞ்சலீஸ் இந்திய திரைப்பட விழாவில் நடிகர்கள் மம்மூட்டி - மோகன்லால் நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது.

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்த பேட்ரியாட் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்துள்ளன.

இந்தப் படத்தினை பிரபல இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் வரும் ஏப்.23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படம் லாஸ் ஏஞ்சலீஸ் இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

இந்தத் திரைப்பட விழா ஏப்.23 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 27 தெற்காசிய திரைப்படங்கள் இந்தமுறை அமெரிக்காவில் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் 18 குறும்படங்கள்(13 பெண்கள் இயக்கியது) இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மலேசியா, பிலிப்பின்ஸ், ஜப்பான், பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி, சௌதி அரேபியா மற்றும் அமெரிக்க படங்கள் திரையிடப்படுகின்றன.

அறிமுக பாகிஸ்தான் பெண் இயக்குநரின் “கோஸ்ட் ஸ்கூல்” என்ற திரைப்படமும் வங்கதேசத்தின் மெஹ்தே ஹாசனின் “சேண்ட் சிட்டி” திரைப்படமும் இதில் திரையிடப்படுகிறது.

வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான திரைப்பட விருது வென்ற அனுபம் ராய் இயக்கிய ‘சாங்ஸ் ஆஃப் ஃபர்கெட்டன் ட்ரீஸ்’ என்ற படமும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Mammootty - Mohanlal's film 'Patriot' to open IFFLA in April.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.