தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

தள்ளிப்போகும் மோகன் லால் - மம்மூட்டியின் பேட்ரியாட் வெளியீடு!

நடிகர்கள் மோகன் லால் - மம்மூட்டியின் பேட்ரியாட் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து...

Mammootty and Mohanlal in the film Patriot.

பேட்ரியாட் படத்தில் மம்மூட்டி - மோகன்லால். - படம்: யூடியூப் / ஆண்டனி ஜோசப் ஃபிலிம் கம்பெனி.

Published On :

நடிகர்கள் மோகன் லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள “பேட்ரியாட்” திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகின் ஜாம்பவான் நடிகர்களான மோகன் லால் மற்றும் மம்மூட்டி நீண்ட காலத்துக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் “பேட்ரியாட்”. இப்படத்தை, முன்னணி இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.

இப்படத்தில், நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். மேலும், சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டில் மலையாள சினிமாவின் மிகப் பெரிய வெளியீடாகக் கருதப்படும் “பேட்ரியாட்” திரைப்படம் வரும் மே 1 அன்று வெளியாகும் என படக்குழுவினர் புதன்கிழமை (ஏப். 1) அன்று அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, இப்படம் வரும் ஏப்ரல் 23 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

The release of the film "Patriot," starring actors Mohanlal and Mammootty, has been postponed.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.