திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுமதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்தூணில் தீபம் ஏற்றுவது என் வேலையல்ல? மதுரை ஆட்சியர் தரப்பு வாதம்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்விதொகுதி மறுவரையறை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை! மு.க. ஸ்டாலின்அரசியலுக்கு வருகிறாரா? நடிகை த்ரிஷா சென்ற சிருங்கேரி சாரதா கோயிலில் என்ன விசேஷம்?121 கிலோ! திருப்பதி காணிக்கையில் வரலாறு படைத்த சென்னை தம்பதி யார்? என்னென்ன ஆபரணங்கள்? படங்கள்!அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தலுக்கான தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!டெல்டா மாவட்டங்களில் பயிர் சாகுபடி பாதிப்பு: முதல்வர் விஜய் ஆலோசனை! ஆவடி மாநகராட்சி மக்களின் கவனத்துக்கு... புகார்கள் தெரிவிக்க மொபைல் செயலி!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (நவ. 27)பறவைகள் உயிரிழப்பு: சென்னை கிண்டி பூங்கா நவ. 30 வரை மூடல்!பெரம்பூர் தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய் மனு தள்ளுபடி!

ஏஜிஎஸ் 29: ஜெய் - பிரியங்கா மோகன் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு குறித்து...

Priyanka Mohan and Jai at the shoot of AGS 29.

ஏஜிஎஸ் 29 படப்பிடிப்பில் பிரியங்கா மோகன், ஜெய். - படங்கள்: எக்ஸ் / ஏஜிஎஸ்

Updated On :

நடிகர் ஜெய் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படக்குழு விடியோ வெளியிட்டு இதனை உறுதிசெய்துள்ளது.

ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 29ஆவது படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் ஜெய் நாயகனாகவும் பிரியங்கா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளார்கள்.

இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இவர் முன்னதாக சக்ரா படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஜெய், பிரியங்கா மோகனுடன் யோகி பாபு, நாசர், ராஜீவ் மேனன், ஜிஎம் சுந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் பிறந்த நாளில் வெளியான போஸ்டரில் பிரெய்லி வடிவில் வாழ்த்துகள் வெளியாகியிருந்தது. அதனால், அவர் கண்பார்வைக் குறைபாடு உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தப் படத்துக்கு கேஜிஎஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கவிருக்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்ததை, படக்குழு விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Summary

AGS 29: Filming for the Jai - Priyanka Mohan starrer has wrapped up!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.