திமுக முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை!கீர்த்தனாதான் தவெக அரசின் துரந்தரா? எடப்பாடி பழனிசாமி கேள்விகாவிரி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிடக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி! உச்ச நீதிமன்றம்கனிம வளங்கள் கொள்ளை குறித்து விசாரணை ஆணையம் அமைக்க கோரிய வழக்கு தள்ளுபடிசிறப்பு டெட் தேர்வு: விண்ணப்பங்களில் பிழைகளைத் திருத்த நவ. 22 வரை அவகாசம்

வித்தியாசமான கதாபாத்திரம்... பிரியங்கா மோகன் பிறந்த நாளில் புதிய பட போஸ்டர்!

நடிகை பிரியங்கா மோகன் பிறந்த நாளில் வெளியான போஸ்டர் குறித்து...

Poster of Priyanka Mohan's film

பிரியங்கா மோகன் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்/ ஏஜிஎஸ்

Updated On :

நடிகை பிரியங்கா மோகன் பிறந்த நாளில் வெளியாகியுள்ள புதிய போஸ்டர் கவனம் ஈர்த்துள்ளது. முதல்முறையாக பிரியங்கா மோகன் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த பிரியங்கா மோகன் 2019ல் தெலுங்கில் நானியுடன் கேங் லீடர் படத்தில் தென்னிந்திய அளவில் புகழ்ப்பெற்றார். தமிழில் டாக்டர் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களியும் ஈர்த்தார்.

தமிழ், தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஐந்து படங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகனின் ஒரு படம்தான் ’ஏஜிஎஸ்29’. இந்தப் படத்தை எம்.எஸ். ஆனந்தன் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் நாசர், ராஜீவ் மேனன், ரமேஷ் திலக் நடிக்கிறார்கள்.

கேஜிஎஃப் புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். திகில் கதையாக உருவாகிவரும் இந்தப் படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் பிரியங்கா மோகன் கண்கள் வித்தியாசமாக இருக்கிறது. இது என்ன மாதிரியான படம் என ரசிகர்களிடம் ஆவலை தூண்டியிருக்கிறது.

திகில் படமா அல்லது அறிவியல் புனைவு என்றா ரசிகர்கள் கமெண்டுகளில் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். மேலும் படக்குழு வெளியிட்ட பதிவில் பிரெய்லியில் எழுதப்பட்டுள்ளதால், அந்த கதாபாத்திரத்தில் அவருக்குக் கண்பார்வை குறைபாடு ஏதும் இருக்குமா என்ற யூகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Summary

A unique character... New film poster unveiled on Priyanka Mohan's birthday!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.