மெட்ராஸ்காரன் பட இயக்குநரின் புதிய திரைப்படம்! படப்பிடிப்பு தொடக்கம்!
மெட்ராஸ்காரன் பட இயக்குநரின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது தொடர்பாக...

மெட்ராஸ்காரன் பட இயக்குநரின் புதிய திரைப்படத்தின் பூஜை. - படம்: எக்ஸ்
வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
‘ரங்கோலி’, ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘புரொடக்ஷன் நம்பர் 1’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இந்தியா ஃபிலிம் கம்பெனியின் முதல் திரைப்படத் தயாரிப்பாக உருவாகும் இந்தப் படத்தில் டீஜே அருணாசலம் கதாநாயகனாக நடிக்கிறார். திவிஜா பிரபாகர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தை வாலி மோகன் தாஸ் தயாரித்து இயக்குகிறார். படத்தின் எழுத்துப் பணிகளை வாலி மோகன் தாஸ் மற்றும் உமர் எஸ். இணைந்து மேற்கொண்டுள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். ஒளிப்பதிவுப் பணிகளை ஆர்தர் ஏ. வில்சன் மேற்கொள்கிறார்.
இந்தியா ஃபிலிம் கம்பெனி, ஸ்ரீ சுமனோஹரா புரொடக்ஷன்ஸ் மற்றும் கிராட்டிட்யூட் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.
இயக்குநர் வாலி மோகன் தாஸ், கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ரங்கோலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து மலையாள நடிகர் ஷேன் நிகம், நிஹாரிகா கொனிடேலா மற்றும் கலையரசன் நடிப்பில் உருவான ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இவ்விரு திரைப்படங்களுக்குப் பிறகு அவர் இயக்கும் புதிய திரைப்படம் என்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.
தற்போது முதல் கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வித்தியாசமான கதைக்களம் மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான குடும்பப் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.
Summary
Filming is underway for a new movie directed by Vali Mohan Das.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


