டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வானதி சீனிவாசனின் காரை மறித்து கண்டன முழக்கம்: போலீஸ் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணியில் வானதி சீனிவாசன் காரை வழிமறித்து கோஷமிட்டதாக 15 பேர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:17 pm

DIN

சென்னை திருவல்லிக்கேணியில் வானதி சீனிவாசன் காரை வழிமறித்து கோஷமிட்டதாக 15 பேர் மீது 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசனின் கார் ஓட்டுநர் கோபிசரவணன் (27). இவர், திங்கள்கிழமை காலை கோவையில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த வானதி சீனிவாசனை காரில் அழைத்துச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கார், திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த 15 பேர் கும்பல், திடீரென காரை வழிமறித்தது. உடனே, ஓட்டுநர் சரவணன் காரை நிறுத்தினார். அப்போது அந்தக் கும்பல், பாஜகவை கண்டித்தும், பிரதமர் மோடியைக் கண்டித்தும், குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியை வாழ்த்தியும் கோஷமிட்டனர். இதற்கிடையே அங்கு வந்த சிலர், கோஷமிட்ட கும்பலை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தது .
இதுகுறித்து சரவணன், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், காரை வழிமறித்து கண்டன கோஷமிட்ட 15 பேர் மீதும் 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் சிலரை விசாரணைக்காக தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.