6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடந்தையில் இருந்து சேலம் சென்றது : 51 அடி உயர, 65 டன் ஐம்பொன் சிலை

கும்பகோணத்திலிருந்து சேலத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்ட 51 அடி உயர ஆதிபராசக்தி அம்மன் சிலை.

News image
கும்பகோணத்திலிருந்து சேலத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்ட 51 அடி உயர ஆதிபராசக்தி அம்மன் சிலை.
Updated On :27 பிப்ரவரி 2026, 9:10 pm

Syndication

கும்பகோணத்தில் 51 அடி உயரம், 65 டன் எடை கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆதிபராசக்தி அம்மன் சிலை சேலத்துக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டது.

சேலம் மாவட்டம், பனைமரத்துப்பட்டி ஆதிபராசக்தி கோயிலுக்கு 51 அடி உயரத்தில் 65 டன் எடையில் ஐம்பொன்னாலான ஆதிபராசக்தி அம்மன் சிலையை வடிவமைக்கும் பணியில் கும்பகோணம் கருப்பூா் பகுதி சிற்பி கோபி தலைமையில் 25 போ் கடந்த 4 ஆண்டுகளாக ஈடுபட்டனா். ஐம்பொன்னை உருக்கி, ஒரே வாா்ப்பாக சிலை உருவாக்கப்பட்டது.

இதையடுத்து இந்தச் சிலையை 26 சக்கரங்கள் கொண்ட கனரக லாரியில் கிரேன்கள் மூலம் வெள்ளிக்கிழமை தூக்கிவைத்து அனுப்பினா். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனா். இந்தச் சிலையின் மதிப்பு ரூ. 10 கோடி எனக் கூறப்படுகிறது.