தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் சாவு

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் படகில் ஏற்பட்டிருந்த பழுதை நீக்கியப்போது தவறி விழுந்தவர், கடலில் மூழ்கி பலியானார். 

News image
Updated On :20 அக்டோபர் 2017, 10:22 pm

DIN

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் படகில் ஏற்பட்டிருந்த பழுதை நீக்கியப்போது தவறி விழுந்தவர், கடலில் மூழ்கி பலியானார். 
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: 
காசிமேடு இந்திரா நகரைச் சேர்ந்த மீனவர் ராஜன் (26). இவர், கடந்த 18ஆம் தேதி காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில், விசைப்படகு ஒன்றை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ராஜன், கடலில் திடீரென தவறி விழுந்தார். இதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் அவர் கடலில் மூழ்கி மாயமானார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் ராஜன் சடலம் கரை ஒதுங்கியது.
இது தொடர்பாக காசிமேடு மீன் பிடி துறைமுகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.