சேலம் அம்மாபேட்டை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக, தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது அம்மிக்கல்லைப் போட்டுக் கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் அம்மாபேட்டை வையாபுரி தெருவைச் சேர்ந்தவர் தங்கம் (40). இவரது மனைவி பத்மா (40). காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.
தங்கம் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தனது மனைவி பத்மாவின் நடத்தையில் சந்தேகமடைந்த தங்கம், அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
நேற்று இரவு தங்கம், மதுபோதையில் வீட்டிற்கு வந்து பத்மாவிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பத்மாவை அவர் தாக்கியதாகவும் தெரிகிறது. பின்னர், தங்கம் அங்கேயே உறங்கிவிட்டதாகத் தெரிகிறது.
கணவரின் தொடர் சித்திரவதையாலும், தாக்குதலாலும் ஆத்திரமடைந்த பத்மா, தங்கம் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த தங்கம், சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தங்கத்தின் சகோதரர் மணி (43) அளித்த புகாரின் பேரில், அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் முருகராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். கொலைக் குற்றத்திற்காக பத்மாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Summary
Police have arrested a wife who killed her sleeping husband with a stone due to a family dispute in the Ammapettai area of Salem.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மது போதையில் தகராறு: இளைஞா் மீது வழக்கு

பணத் தகராறு: பெட்ரோல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது

உணவு சமைப்பதில் தகராறு! மனைவியைக் கொன்ற கணவர் கைது!
குடும்பத் தகராறில் எலக்ட்ரீஷியன் தற்கொலை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




