வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை

சென்னை கொருக்குப்பேட்டையில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Updated on
1 min read

சென்னை கொருக்குப்பேட்டையில் வயதான தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் நாவல் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (75). இவரின் மனைவி கிருஷ்ணவேணி (65). இவர்களுக்கு, ஆனந்தகுமார் என்ற மகனும், ஜானகி என்ற மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி, வெளியூர்களில் வசிக்கின்றனர்.
இதனால் சண்முகமும், கிருஷ்ணவேணியும் மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தனர். மேலும் சண்முகம், வீட்டு வாடகை பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டி வந்தார்.
வயதான இருவரும், நோயால் அவதிப்பட்டு வந்துள்ளனர். சண்முகத்திற்கு இதய நோயும், கிருஷ்ணவேணிக்கு சிறுநீரகப் பிரச்னையும் இருந்துள்ளது. இதனால் அவர்கள், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதன் விளைவாக வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும், வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஆர்.கே.நகர் போலீஸார், இருவர் சடலத்தையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com