நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெளிநாடுகளுக்கு பார்சல் சேவை: தபால்துறைக்கு ரூ.780 கோடி வருமானம் கிடைக்க வாய்ப்பு

வெளிநாடுகளுக்கு பார்சல் உள்பட பல்வேறு பொருள்களை அனுப்புதல், அங்கிருந்து அனுப்பப்படும் பொருள்களை உரியவர்களிடம் சேர்த்தல் ஆகிய இரு பிரிவுகளிலும் சேர்த்து நடப்பு நிதியாண்டில் இந்திய தபால்துறைக்கு

News image
Updated On :26 அக்டோபர் 2017, 10:37 pm

மு. வேல்சங்கர்

வெளிநாடுகளுக்கு பார்சல் உள்பட பல்வேறு பொருள்களை அனுப்புதல், அங்கிருந்து அனுப்பப்படும் பொருள்களை உரியவர்களிடம் சேர்த்தல் ஆகிய இரு பிரிவுகளிலும் சேர்த்து நடப்பு நிதியாண்டில் இந்திய தபால்துறைக்கு மொத்தம் ரூ.780 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
ரூ.600 கோடி வருவாய்: 2016}17}ஆம் நிதியாண்டில் பதிவு செய்யப்பட்ட தபால், பார்சல் உள்பட பல்வேறு பொருள்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியது, வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருள்களை இங்கு டெலிவரி செய்தது ஆகிய இரு பிரிவுகளில் மொத்தம் ரூ.600 கோடி வருமானத்தை இந்திய தபால் துறை ஈட்டியது. வெளி நாடுகளுக்கு பொருள்கள் அனுப்பிய வகையில் ரூ.400 கோடி, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் டெலிவரி செய்த வகையில் ரூ.200 கோடி ஆக மொத்தம் ரூ.600 கோடி வருமானம் கிடைத்தது.
நிகழாண்டின் 6 மாதத்தில் ரூ.260 கோடி: நிகழாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதத்தில், வெளிநாடுகளுக்கு பொருள்கள் அனுப்பியதன் மூலம் மட்டும் ரூ.260 கோடி வருமானத்தை இந்திய தபால்துறை ஈட்டியுள்ளதாகவும், இதில் கணிசமான வருமானத்தை தமிழக தபால் துறை ஈட்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த 6 மாதங்களில் அதாவது அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையுள்ள 6 மாதங்களில் தபால்களை அனுப்புவதன் மூலம் மேலும் ரூ.300 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தபால்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் மொத்தம் ரூ.560 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இது ரூ.400 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பல்வேறு பொருள்களை டெலிவரி செய்வதன் மூலம் கணிசமான வருவாய் தபால்துறைக்குக் கிடைக்கிறது. 
இந்தப் பிரிவிலும் வருவாயை அதிகரிக்கத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்காரணமாக, வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புதல், அங்கிருந்து இந்தியாவுக்கு அனுப்பி உரிய நபர்களிடம் டெலிவரி செய்தல் ஆகிய இரு பிரிவிலும் சேர்த்து மொத்தம் ரூ.760 கோடி முதல் ரூ.780 கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு மொத்த வருவாய் ரூ.600 கோடி.

ரூ.30 கோடி இலக்கு 

தமிழ்நாடு வட்ட தபால் துறையைப் பொருத்தவரை, வெளிநாடுகளுக்கு தபால் சேவை மூலமாக 2016}17} ஆம் நிதியாண்டில் ரூ.60 கோடி வருமானம் கிடைத்தது. இதுபோல, நிகழாண்டிலும் அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை 6 மாதத்துக்குள் வெளிநாடுகளுக்கு பதிவு செய்யப்பட்ட பொருள்கள், பார்சல், கடிதம் உள்பட பல்வேறு பொருள்கள் அனுப்புவது மற்றும் டெலிவரி செய்வதன் மூலம் மட்டும் சுமார் ரூ.50 கோடி வருமானம் ஈட்ட தமிழ்நாடு வட்ட தபால்துறை இலக்கு நிர்ணையித்துள்ளது.

5 மாநகரங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள்

தமிழ்நாடு வட்ட தபால்துறை தலைவர் எம்.சம்பத், வெளிநாடுகளுக்கு பார்சல் உள்பட பல்வேறு பொருள்கள் அனுப்புவதற்கு தனிக் கவனம் செலுத்தப்படுகிறது. இந்தச் சேவைகளை மக்கள் எளிதாகப் பெறும் வகையில், தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கு பார்சல் உள்பட பல்வேறு பொருள்கள் அனுப்பும் வசதி தபால் அலுவலங்களில் இருந்தாலும், இதற்காக பிரத்யேகமான கவுன்ட்டர் சென்னையில் பரங்கிமலை, தியாகராயநகரில் மட்டும் உள்ளன. இதுபோல, மற்ற மாநகரங்களில் ஏற்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. இன்னும் 3 மாதங்களுக்குள், தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம் போன்ற மாநகரங்களில் சிறப்பு கவுன்ட்டர் அமைக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் சம்பத்.
தமிழ்நாடு தபால் வட்டத்தில் தலைமை தபால் அலுவலகம், துணை தபால் அலுவலகம், கிளை தபால் நிலையம் என்று மொத்தம் 12,185 தபால் அலுவலகங்கள் செயல்படுகின்றன. 2,625 தபால் அலுவலங்களில் வெளிநாடுகளுக்கு பார்சல் உள்பட பல்வேறு பொருள்கள் அனுப்பும் வசதி உள்ளதென்றா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.