மருத்துவ தொழில்நுட்பங்கள் நவீனமடைந்துள்ளதால் முதியோரின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது என்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதியோர் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் பி.பி.தாக்ஷôயணி கூறினார்.
பொதுமக்கள், மருத்துவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் டாக்டர் தாக்ஷôயணி கூறியது: முதியோருக்கு சிறப்புக் கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். உடல் நலத்துக்கு மட்டுமல்ல, உளவியல் சார்ந்த சிகிச்சைகளும் அவர்களுக்கு அவசியமாகும். தற்போது முன்னேறியுள்ள தொழில்நுட்பங்களின் காரணமாக, தரமான சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால், முதியோரின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 1988-ஆம் ஆண்டு முதியோருக்கான அறுவைச் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டது. தற்போது இந்தப் பிரிவில் 30 படுக்கைகள் உள்ளன. இந்தப் பிரிவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பிரிவில் முதியோருக்கான பெரிய மற்றும் சிறிய அறுவைச் சிகிச்சைகள், சிகிச்சை முறைகள் என அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன என்றார் அவர். 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
ஒரே சார்ஜிங்கில் 180 கி.மீ..! ரூ. 99,999-ல் ஓபன் ரோர் பைக்!

ஓய்விலிருந்து கிளாசனை வெளியே கொண்டு வாருங்கள்: கெவின் பீட்டர்சன்

தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், தேர்வுக் குழுவினர் பதவிக்கு ஆட்கள் தேவை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

