பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை, வண்ணாரப்பேட்டையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது.

Updated On :3 ஆகஸ்ட் 2018, 4:18 am IST


சென்னை, வண்ணாரப்பேட்டையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்றது.
வண்ணாரப்பேட்டை கல்லறைச் சாலையில் ஒரு தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளி கிடையாது. புதன்கிழமை நள்ளிரவு இங்கு 4 மர்ம நபர்கள் வந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா இணைப்பை துண்டித்தனர். பின்னர் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து, கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கத் தொடங்கியது. இதனால் அவர்கள் தப்பிச் சென்றனர்.
அபாய மணி சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஏ.டி.எம். இயந்திரத்தின் எச்சரிக்கை மும்பையில் அதன் தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்து, அங்கிருந்த ஊழியர்கள் சென்னை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனர். கொள்ளையர்களின் முயற்சி தோல்வியடைந்ததால், ஏ.டி.எம். மையத்தில் இருந்த ரூ.10 லட்சம் தப்பியுள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.