உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

பரங்கிமலை ரயில் விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்தினர் இழப்பீடு கோரி ஆலோசனை

சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரின் குடும்பத்தினர் மட்டும் இழப்பீடுக்காக ரயில்வே தீர்ப்பாயத்தை திங்கள்கிழமை நாடினர்.

Published On :


சென்னை பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவரின் குடும்பத்தினர் மட்டும் இழப்பீடுக்காக ரயில்வே தீர்ப்பாயத்தை திங்கள்கிழமை நாடினர்.
பரங்கிமலை ரயில் நிலையத்தில் அண்மையில் நிகழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; 5 பேர் காயமடைந்தனர். சேத்துப்பட்டில் உள்ள ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தியது. அதில், உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விபத்து குறித்து தீர்ப்பாய அலுவலகத்தை அணுகலாம்' என உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, விபத்து இழப்பீடு வழங்க தீர்ப்பாயத்தில் ரூ.42 லட்சத்தை தெற்கு ரயில்வே டெபாசிட் செய்துள்ளது. ஆனால், தீர்ப்பாயத்தை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் எவரும் ஞாயிற்றுக்கிழமை வரை அணுகவில்லை.
இந்நிலையில், சேத்துப்பட்டில் உள்ள ரயில்வே தீர்ப்பாயத்தை விபத்தில் உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தினர் திங்கள்கிழமை நாடினர். இழப்பீடு பெற விண்ணப்பிப்பது தொடர்பாக அவர்கள் ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.