முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கருப்புப் பண சட்ட விவகாரம்: கார்த்தி சிதம்பரம் ஆஜராக உத்தரவு

கருப்புப் பண சட்ட விவகாரத்தின் கீழ் வருமான வரித் துறை தாக்கல் செய்த புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வரும் செப்டம்பர் 3- இல் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவ

Updated On :21 ஆகஸ்ட் 2018, 4:23 am IST


கருப்புப் பண சட்ட விவகாரத்தின் கீழ் வருமான வரித் துறை தாக்கல் செய்த புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், வரும் செப்டம்பர் 3- இல் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் வாங்கிய சொத்து விவரங்களை வருமான வரி கணக்கில் காட்டவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கருப்புப் பண மோசடி தடுப்பு சட்டத்தைக் கொண்டு வந்தார். இச்சட்டத்தின் கீழ் இங்கிலாந்து நாட்டில் ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பிலான இரண்டு சொத்துகள், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்பிலான சொத்துகள் வாங்கியது தொடர்பாக விளக்கம் கேட்டு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேர் சார்பிலும் விளக்கம் அளித்திருந்தனர்.
கருப்புப் பண சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறை எழும்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தது. இப்புகார் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்குரைஞர் நளினி சிதம்பரம் உள்ளிட்ட 3 பேரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
நளினி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆஜர்: இந்த வழக்கு நீதிபதி எஸ்.மலர்விழி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் நளினி சிதம்பரம் மற்றும் அவரது மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராகினர். உச்ச நீதிமன்ற அனுமதி பெற்று கார்த்தி சிதம்பரம் லண்டன் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது வழக்குரைஞர் நளினி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதியிடம் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் அளிக்கப்பட்டன. வழக்கை செப்டம்பர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.