திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

தொழில்நுட்ப மாணவர்களுக்கு தைவானில் வேலைவாய்ப்பு

தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தைவானில் வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக  தைவான் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி அமைச்சகத் திட்ட இயக்குநர் ஜெனிலியோ கூறினார்.

சென்னையை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் பொறியியல் கல்லூரியில்  நடைபெற்ற தைவான் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற மாணவியருடன் கலந்துரையாடுகிறார் தைவான் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி அமைச்சகத் திட்ட இயக்குநர்

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தைவானில் வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக  தைவான் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி அமைச்சகத் திட்ட இயக்குநர் ஜெனிலியோ கூறினார்.
சென்னையை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் பொறியியல் கல்லூரியில் தைவான் வேலைவாய்ப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது. தைவான் நாட்டைச் சேர்ந்த 11 கணினி,  தகவல் தொழில்நுட்பம்,  மின்னியல், மின்னணுவியல் துறையைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள்  பங்கேற்று மாணவர்களிடம் முதல்கட்டத் தேர்வை நடத்தின. பங்கேற்ற 460 மாணவர்களில் 110 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதுகுறித்து  தைவான் வெளிநாட்டு வர்த்தக வளர்ச்சி அமைச்சகத் திட்ட இயக்குநர் ஜெனி லியோ செய்தியாளர்களிடம் கூறியது:
மின்னியல், மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த  சர்வதேசத் தரமிக்க உதிரி பாகங்கள், பொருள் உற்பத்தியில் தைவான் உலக அளவில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா, தைவான் இருநாடுகளின் கல்வித்திறன் மிகுந்த மனிதவள ஆற்றலை இருதரப்பு நாடுகளும் பயன்படுத்தி பயனடையும் நோக்குடன் பல்வேறு பொறியியல் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்ப மனிதவள  அறிவாற்றலை பயன்படுத்தி, தைவானில் தொழிலை விரிவுபடுத்தி, சர்வதேச போட்டியை எதிர்கொள்ளும்  வளர்ச்சித் திட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். தற்போது இந்தியாவைச் சேர்ந்த 14,499 இளைஞர்களுக்கு தைவானில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார் ஜெனி லியோ.
கல்லூரி  முதல்வர் எஸ். லட்சுமி, மேலாளர்  ஏஞ்சலிகா ஹூ, இந்திய பிரதிநிதி கிறிஸ்டின் லீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.