எழும்பூர், தண்டையார்பேட்டை கோட்டங்கள் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் புதன்கிழமை (பிப்.14), வியாழக்கிழமை ( பிப்.15) நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: எழும்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் புதன்கிழமை, மேயர் ராமநாதன் சாலையில் அமைந்துள்ள எழும்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வியாழக்கிழமை (பிப். 15), தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் இரட்டைக்குழி தெருவில் அமைந்துள்ள தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த சிறப்புக் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.