தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பிப்.27-இல் அலங்காரத் தோட்டம் அமைத்தல் பயிற்சி முகாம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், புல்தரை மற்றும் அலங்காரத் தோட்டம் அமைத்தல் பயிற்சி வரும் 27-ஆம் தேதியும், காளான் வளர்ப்பு பயிற்சி வரும் 28-ஆம் தேதியும்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 11:02 pm

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், புல்தரை மற்றும் அலங்காரத் தோட்டம் அமைத்தல் பயிற்சி வரும் 27-ஆம் தேதியும், காளான் வளர்ப்பு பயிற்சி வரும் 28-ஆம் தேதியும் அண்ணா நகரில் நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்த மையத்தின் தலைவர் எச்.கோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை அண்ணா நகரில் செயல்படும் எங்கள் மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 
அந்த வகையில், புல்தரை மற்றும் அலங்காரத் தோட்டம் அமைத்தல் பற்றிய ஒருநாள் பயிற்சி பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதேபோல, காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த பயிற்சியானது நகரவாசிகள், மகளிர், மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாய்ப்பாக அமையும். ஒரு நாள் பயிற்சிக்கு கட்டணம் ரூ.600. 
இந்த பயிற்சி வகுப்பு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம். 
கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், எண்.யு-30, 10 -ஆவது தெரு, (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்), அண்ணாநகர் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.