மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புத்தகக் காட்சி 2018: அரங்கில் புதிது...

News image
Updated On :13 ஜனவரி 2018, 9:11 pm

ஸ்ரீதேவி குமரேசன

வாகீச முனிவரின் ஞானாமிர்தம்
(சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல்)

ஆசிரியர்: ஆ.ஆனந்த ராசன்
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
விலை: ரூ.650
குறிப்பு: பதி, பசு, பாசம் பற்றி விளக்கமாக பேசும் சைவ சித்தாந்த நூல் இது.  இதுவரை எந்த சைவ சித்தாந்த நூலிலும் வராத விளக்க உரையுடன் 
இடம்பெற்றிருப்பது தனிச் சிறப்பு. 

பெண் கதை எனும் பெருங்கதை 
ஆசிரியர் : கி.ராஜநாராயணன்

வெளியீடு : அகரம் 
விலை : ரூ.90
குறிப்பு: பெண் எனும் பிரபஞ்சத்தைப் பேழையில் அடைக்கும் முயற்சிகள், பெண்ணடிமை , ஆணாதிக்கம் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் அளக்கும் சில குறுகிய பெண்ணிய சித்தாந்தங்கள், பெண்ணுக்கான இலக்கணங்கள் அனைத்தும் உடைபடும் பெருங்கதை நூல். 


பி.சி. டாக்டர் 
ஆசிரியர் : தே.ஜீவநேசன்

வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
விலை: ரூ.130
குறிப்பு: கணினியின் பயன்பாடும் தேவையும், கணினியின் அறிமுகம், பேசிக் அண்ட் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் அசம்பிளிங், சாஃப்ட்வேர் இன்ஸ்டாலேஷன் உள்ளிட்ட தகவல்களை உள்ளடக்கிய நூல் இது.


மருந்தாகும் 
வாசனைப் பொருள்கள்

ஆசிரியர் : ஜெ.மங்கையர்க்கரசி
வெளியீடு: மருத்துவப் பதிப்பகம்
விலை: ரூ.50
குறிப்பு: நாம் உணவில் பயன்படுத்தும் 
வாசனைப் பொருள்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் ஊட்டச் சத்துகளைப் பற்றிய தகவல்கள் பொதிந்து இருக்கும் மருத்துவப் பயன்களும், அறிவியல் சார்ந்து வெளிப்படுத்துகிறது இந்த புத்தகம்.

சொல் அல்ல செயல் 
ஆசிரியர் : அதிஷா

வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: ரூ.215
குறிப்பு: தனிமனிதனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய குணங்கள், தகுதிகள், உணர்வுகள் யாவும் முற்றிலும் மாறுபட்டிருக்கும் நிலையில் பெற்றோர் மீது உண்மையான அக்கறை, எளிய மனிதன் மீதான அக்கறை, இப்படி இயல்பான குணங்களை இழந்துவரும் நாம் எப்படி ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும் என்பதை எடுத்துரைக்கும் நூல் இது. 


பெரியவரை மதித்தல் 
ஆசிரியர்: எ.சோதி


வெளியீடு : நன்மொழி பதிப்பகம்
விலை : ரூ. 30
குறிப்பு: பெரியவரை மதித்தல் என்ற இந்நூல், சிறுவர்களுக்கு நற்பண்பை வளர்க்கும் நீதிக் கதைகள் அடங்கிய நூல் இது. இந்நூலை படிக்கும் சிறுவர், சிறுமியர் பெரியவர்களின் மேன்மையை அறிந்து கொள்ள உதவும் வழிகாட்டியாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.