செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

நியாயவிலைக் கடை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்

நியாயவிலைக் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

Updated On :9 ஜூலை 2018, 10:52 pm

நியாயவிலைக் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கான ஊதியத்தை மாதாமாதம் வழங்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஊழியர்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
நியாயவிலைக் கடைகள் திறந்திருக்கும் நாள்களிலேயே அனைத்துப் பொருள்களும் ஒரே நேரத்தில் கிடைப்பதில்லை. இதில், கடைகள் சரிவர இயங்காமல் இருந்தால் அதனால் பெருமளவு பாதிக்கப்படுவது அந்தப் பொருள்களை மட்டுமே நம்பி வாழும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான். 
எனவே, நியாயவிலைக் கடை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், பொருள்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கவும், பொருள்கள் விநியோகத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.