கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

மதுபோதையில் தகராறு செய்வோர் மீது பெப்பர் ஸ்பிரே: விளக்கம் கோரி டிஜிபிக்கு நோட்டீஸ்

மதுபோதையில் பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவோர் மீது போலீஸார் பெப்பர் ஸ்பிரே' பயன்படுத்துவது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு டிஜிபி உள்ளிட்ட

News image
Updated On :9 ஜூலை 2018, 10:50 pm

DIN

மதுபோதையில் பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவோர் மீது போலீஸார் பெப்பர் ஸ்பிரே' பயன்படுத்துவது குறித்து இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு டிஜிபி உள்ளிட்ட காவல் துறை உயரதிகாரிகளுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை பெருநகர காவல் துறையின் அம்பத்தூர் காவல் மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மது போதையில் பொது இடங்களில் தகராறில் ஈடுபடுவோர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தும் உத்தி கடைப்பிடிக்கப்படுவதாகவும், இதற்காக கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து 400 பெப்பர் ஸ்பிரே பாட்டில்கள் வாங்கப்பட்டுள்ளதாவும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.
டிஜிபி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்: இந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். மேலும், எந்த சட்டப் பிரிவின் அடிப்படையில் மது போதையில் தகராறில் ஈடுபடுவோர் மீது பெப்பர் ஸ்பிரே பயன்படுத்தப்படுகிறது? இதனால், சம்பந்தப்படுவோரின் கண் பார்வை பாதிக்கப்படாதா?. இவ்வாறு பெப்பர் ஸ்பிரே பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா? என கேள்விகளை ஆணையம் எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக டிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையர், அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு மாநில மனித உரிமைகள் ஆணையம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.