செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆயுதப் படை காவலருக்கு கத்திக்குத்து

மேற்கு தாம்பரத்தில் ஆயுதப்படை காவலரை கத்தியால் குத்தி செல்லிடப்பேசியை பறித்துச் செல்ல முயன்றவரை போலீஸார் தேடி

Updated On :9 ஜூலை 2018, 10:51 pm

மேற்கு தாம்பரத்தில் ஆயுதப்படை காவலரை கத்தியால் குத்தி செல்லிடப்பேசியை பறித்துச் செல்ல முயன்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். சென்னை, கிழக்கு தாம்பரம் 4-ஆவது தெருவில் வசித்து வருபவர் ஆயுதப் படைக் காவலர் ஞானசேகரன் (32). இவர் பரங்கிமலை துணை ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு ஆயுதப்படை காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி அளவில் பணி முடித்து தன்னுடன் பணிபுரிந்து வரும் காவலர் கலைச்செல்வனுடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வீட்டுக்குச் செல்ல ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரில் அவர் இறங்கினார். அதைத் தொடர்ந்து சாலையோரத்தில் அவர் இருட்டில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் கத்தியைக் காட்டி பணம், செல்லிடப்பேசியைக் கேட்டுள்ளார். சுதாரித்த ஞானசேகரன், அந்த நபரைப் பிடிக்க முயன்றபோது, அந்த நபர் கத்தியால் குத்தியதில், ஞானசேகரன் பலத்த காயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு இரு சக்கர வாகனத்துடன் சற்று தொலைவில் நின்ற சக காவலர் கலைச்செல்வன் ஓடி வந்துள்ளார். அதற்குள் கத்தியால் குத்திய நபர் தப்பியோடி தலைமறைவானார்.
காயமடைந்த ஞானசேகரன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சேலையூர் போலீஸார் வழக்குப் பதிந்து காவலை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.