திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நாம சங்கீர்த்தன மேளா: அம்பத்தூரில் ஆகஸ்ட் 8-இல் தொடக்கம்

நாம சங்கீர்த்தன மேளா மற்றும் நவ திருக்கல்யாண மஹோத்ஸவம் சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

Updated On :9 ஜூலை 2018, 10:52 pm

நாம சங்கீர்த்தன மேளா மற்றும் நவ திருக்கல்யாண மஹோத்ஸவம் சென்னை அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பத்தில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 
நாம சங்கீர்த்தன சம்ரக்ஷண அறக்கட்டளை சார்பில் அம்பத்தூர் கள்ளிக் குப்பம் செங்குன்றம் சாலையில் உள்ள ஸ்ரீவாரி சேஷ மஹாலில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீருணவிமோசன கணபதி ஹோமம், ஸ்ரீ நவக்ரஹ ஹோமம், ஸ்ரீ நக்ஷத்ர ஹோமம், ஸ்ரீ ஸþக்த ஹோமம், ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம் மற்றும் லலிதா சகஸ்ரநாம பாராயணம், ஸ்ரீ தன்வந்தரி ஹோமம், ஸ்ரீ ராதா மஹோத்சவம், பக்த விஜய சரித்திரம் உள்ளிட்ட இசைச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
நிகழ்ச்சிகள் அனைத்தும் தினமும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என நாம சங்கீர்த்தன சம்ரக்ஷண அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியின் பொறுப்பாளர் ஜி.ஜி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தகவல் பெற 8939343400 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறக்கட்டளை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.