பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நீதிபதிக்கு மிரட்டல்: உயர் நீதிமன்றத்தில் முறையீடு

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லாது எனத் தீர்ப்பளித்த நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள்

Updated On :9 ஜூலை 2018, 10:54 pm

டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.-க்களை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு செல்லாது எனத் தீர்ப்பளித்த நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
எம்.எல்.ஏ.-க்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பளித்த நீதிபதி எம்.சுந்தர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி சுந்தரின் வீட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு வழஙகப்பட்டது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நீதிபதி எம்.சுந்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முறையிட்டார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதனை போலீஸார் சட்டப்படி எடுப்பார்கள். அந்தப் பணிகளை போலீஸ் பார்த்துக் கொள்ளும்'' என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்துத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.