வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசு பொது மருத்துவமனையில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்குத் தடை

பிளாஸ்டிக் பொருள்களுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி கூறினார்.

News image
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலைக் காக்க உறுதிமொழி எடுத்துக் கொண்ட மருத்துவர்கள்.
Updated On :5 ஜூன் 2018, 11:01 pm

DIN

பிளாஸ்டிக் பொருள்களுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயந்தி கூறினார்.
உலக சுற்றுச்சூழல் தின விழா அரசு பொது மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
நிகழ்ச்சியில் டாக்டர் ஜெயந்தி பேசியது:
ஜூன் மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் மாதமாக அனுசரிக்க உள்ளோம். இந்த மாதத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிப்பதே முதல் நோக்கம். அதற்கு முதல் கட்டமாக மருத்துவமனையின் அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் தங்கள் வீடுகளில் சமையல் பொருள்களை பிளாஸ்டிக் பாத்திரங்களில் அடைத்து வைக்காமல் பிற பாத்திரங்களில் வைக்க வேண்டும் என்றார் அவர். 
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதிமொழி எடுத்தனர். மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, மருத்துவர்கள், மருத்துவ, செவிலிய மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சித்த மருத்துவமனை: சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனையின் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
பேரணியை இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர் டாக்டர் செந்தில்ராஜ், காவல் துறை உதவி ஆணையர் சுரேந்திர நாத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சித்த மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.