எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

மோட்டார் சைக்கிள் பந்தயம்: 4 பேர் கைது

சென்னை அடையாறில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :8 ஜூன் 2018, 4:29 am IST

சென்னை அடையாறில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சில நாள்களாக அடையாறு, மெரீனா, கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் சிலர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதாக போக்குவரத்து போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், போக்குவரத்து போலீஸார் புதன்கிழமை இரவு அடையாறு திரு.வி.க. பாலத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹலில்பாஷா (19), அப்துல்கரீம் (19), பெரம்பூரைச் சேர்ந்த சல்மான் (23), 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அப்துல்கரீம், பெரியமேட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஹலில் பாஷா, ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிகிறார். சல்மான் ஏ.சி.மெக்கானிக்காக உள்ளார். அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.