சென்னையில் ரூ.85 கோடி செலவில் கண்காணிப்புக் கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் கூறினார்.
கண்காணிப்புக் கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை அண்ணாநகர் டவர் பார்க் அருகே வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.
விசுவநாதன் பேசியது: கண்காணிப்புக் கேமரா குற்றங்களைக் கண்டறிய மட்டுமன்றி, குற்றங்களைத் தடுக்கவும் பேருதவி செய்கிறது. எனவே பொதுமக்கள், குற்றங்களைத் தடுக்க தங்களது வீடுகளில் கண்டிப்பாக கண்காணிப்புக் கேமரா பொருத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். கண்காணிப்புக் கேமரா காவல்துறையின் மூன்றாவது கண்ணாக உள்ளது.
துப்பு துலக்க முடியாத வழக்குகளிலும், சவாலான வழக்குகளிலும் கண்காணிப்புக் கேமரா மூலமே குற்றவாளிகளைப் பற்றிய தடயங்கள் போலீஸாருக்கு கிடைக்கிறது. சென்னையில் தொடர்ச்சியாக வழிப்பறியில் ஈடுபட்ட ஈரானியக் கொள்ளையர்களை அண்மையில் பிடிக்க கண்காணிப்புக் கேமராவே உதவியது. சென்னையில் காவல்துறையின் சார்பில் ரூ.85 கோடி செலவில் கண்காணிப்புக் கேமராக்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது. இதற்காக சென்னை எம்.பி.க்கள் தங்கள் நிதியில் இருந்து ரூ.3 கோடி தருவதாகக் கூறி உள்ளனர் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் எச்.எம்.ஜெயராமன், இணை ஆணையர் பிரேம்ஆனந்த் சின்ஹா, துணை ஆணையர்கள் சிவக்குமார், எம்.சுதாகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |

நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறும் முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை

இ20 மக்கள் கட்சிக்கு பெருகும் ஆதரவு! 3 லட்சத்தைக் கடந்த ஃபாலோவர்ஸ்!
விடியோக்கள்

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |


