தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு: கல்லூரி மாணவர் இருவர் கைது

சென்னை ஐ.சி.எப். பகுதியில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :1 மார்ச் 2018, 10:56 pm

DIN

சென்னை ஐ.சி.எப். பகுதியில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அம்பத்தூரில் இருந்து அண்ணா சதுக்கம் நோக்கி புதன்கிழமை இரவு ஒரு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. ஐ.சி.எப். காந்திநகர் வீட்டுவசதி வாரியம் அருகே செல்லும்போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் பேருந்தின் மீது கற்களை வீசினர். 
இதில் பேருந்து கண்ணாடி உடைந்தது. பேருந்து ஓட்டுநர் கட்டிமுத்துவின் புகாரின் பேரில் ஐ.சி.எப். காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.