
சென்னை, குமரன் நகர் பகுதியில் சிறுமியிடம் தவறாக நடந்ததோடு, அச்சிறுமியைக் கொலை செய்ய முயன்ற இளைஞருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் இரட்டை ஆயுள் சிறை தண்டனையுடன், கூடுதலாக 10 ஆண்டு சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தது.
இதுகுறித்து சென்னை காவல் துறை புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த 2008 பிப்.6-ஆம் தேதி இவர்களின் 6 வயது பெண் குழந்தை ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தது.
அப்பகுதி இளைஞர் ஐயப்பன் (25) அச்சிறுமியிடம் தவறான நடந்துகொண்டதோடு, கொலை செய்யவும் முயன்றுள்ளார். அவரிடம் இருந்து விடுபட்ட சிறுமி தனது தந்தையிடம் அழுதுகொண்டு வந்து நடந்ததை கூறியதை அடுத்து குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை மேற்கொண்ட போலீஸார் ஐயப்பனை கைது செய்தனர். இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. இதன் விசாரணை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. ஐயப்பன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன், கூடுதலாக 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அத்துடன் அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த குமரன் நகர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விசுவநாதன் பாராட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





