எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் பழுது காரணமாக மின்உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

Updated On :14 மே 2018, 9:02 pm

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை முதல் அலகில் கொதிகலன் பழுது காரணமாக மின்உற்பத்தி தடைப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியது: சென்னையை அடுத்த அத்திப்பட்டில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் சொந்தமாக அனல் மின்நிலைய வளாகம் உள்ளது. இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 3 அலகுகள் உள்ளன. அந்த வளாகத்திலேயே தலா 600 மெகாவாட் திறன்கொண்ட 2 அலகுகளைக் கொண்ட விரிவாக்க மின்நிலையங்களும் உள்ளன.
இந்நிலையில், முதல் அலகில் உள்ள பாய்லர் டியூப் பஞ்சர் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. கோடை காலத்தில் ஏற்படும் அதிகளவு மின்தேவையைக் கருத்தில் கொண்டு அனைத்து மின்உற்பத்தி நிலையங்களிலும் முழு அளவு மின்உற்பத்தியை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய மின்நிலையமாக உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் 600 மெகாவாட் உற்பத்தி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பழுது ஓரிரு நாளில் சரிசெய்யப்பட்டு, மின்உற்பத்தி மீண்டும் துரிதமாகத் தொடங்கப்படும். இதேபோன்று தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகளில் 2}ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பழுதும் விரைந்து சீர்செய்யப்பட்டு மின்உற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.