தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

அரும்பாக்கம் இந்து மயான பூமி ஜூன் 15-வரை செயல்படாது: மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரும்பாக்கம் இந்து மயான பூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 25) முதல் ஜூன் 15 வரை இந்த மயானபூமி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 மே 2018, 2:58 am IST

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரும்பாக்கம் இந்து மயான பூமியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (மே 25) முதல் ஜூன் 15 வரை இந்த மயானபூமி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சி மண்டலம் 8-க்கு உள்பட்ட அரும்பாக்கத்தில் இந்து மயான பூமி அமைந்துள்ளது. 
இந்த மயான பூமியில் சடலத்தை எரிக்கும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. அதை பராமரிக்கும் பணி மேற்கொள்வதையொட்டி, வெள்ளிக்கிழமை (மே 25) முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை மயான பூமி செயல்படாது.
இக்காலக்கட்டத்தில், அருகில் உள்ள அண்ணா நகர், நியூ ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு இந்து மயான பூமி, நுங்கம்பாக்கம் இந்து மயான பூமியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.