ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சென்னை விமான நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

சென்னை விமான நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு துணி பைகளை விநியோகித்த விமான நிலைய அதிகாரிகள்.

Updated On :6 நவம்பர் 2018, 2:39 am IST

சென்னை விமான நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் உலகம் முழுவதும் 300 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இப்படி பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கால் நமது நீர்வழித் தடங்கள், நதிகள், பெருங்கடல்கள் போன்றவை சீர்கெட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. இதையடுத்து, பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை தடுக்க உலக அளவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்போது முதலில் வந்த 1,000 பயணிகளுக்கு எளிதில் மக்கக் கூடிய, மறுசுழற்சி செய்யக்கூடிய ஷாப்பிங் பைகள் வழங்கப்பட்டன. அத்துடன் அடுத்து வந்த 5,000 பயணிகளுக்கு துணி பைகளும் வழங்கப்பட்டன. இந்த பைகளை சென்னை விமான நிலையப் போக்குவரத்து இயக்கப்பரிவு பொது மேலாளர் பி.கே.ஸ்ரீவத்சவா, துணை பொது மேலாளர் நந்த குமார் ஆகியோர் பயணிகளுக்கு விநியோகித்தனர். 
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதற்கு தொடக்கமாக துணி பைகளை விமான நிலையத்தில் விநியோகித்தது எங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. இனி பிளாஸ்டிக் பைகளை நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என பயணிகள் சிலர் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.