திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சென்னை குடிநீர் ஆதாரங்களை விரிவுபடுத்த சிறிய ஏரிகள் - கல் குவாரிகளில் ஆய்வுப்பணி

சென்னை மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களை விரிவுபடுத்தும் பணியில் குடிநீர் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய

News image

சென்னை மாநகரின் நீர் ஆதாரங்களை விரிவாக்குவதற்காக நகரைச் சுற்றியுள்ள சிறிய ஏரிகள் மற்றும் கைவிடப்பட்ட குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளும் களப் பணியாளர்கள். 

Updated On :9 அக்டோபர் 2018, 4:25 am IST


சென்னை மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களை விரிவுபடுத்தும் பணியில் குடிநீர் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய குடிநீர் ஆதாரங்களைக் கண்டறிவதற்காக சிறிய ஏரிகள், கல் குவாரிகளில் ஆய்வுப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் உத்தரவின்படி சென்னை குடிநீர் வாரியம் மாநகர குடிநீர் வழங்கலுக்கான புதிய ஆதாரங்களைக் கண்டறிய சென்னை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கைவிடப்பட்ட கல்குவாரிகளிலிருந்து நீரை எடுத்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ரெட்டேரியில்...: மாதவரம் அருகில் உள்ள ரெட்டேரியில் சாத்தியக்கூறு ஆய்வுகள் அண்மையில் முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அந்த ஏரியின் அருகில் நவீன நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கான திட்டம் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் நீர் ஆதாரத் தேவைக்கான திட்டம் குறித்து அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பதன் பொருட்டு ஆய்வின் நோக்கம், திட்டம், ஆய்வை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை வரையறுக்க சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் அசோக் டோங்ரே, செயல் இயக்குநர் த.பிரபுசங்கர் ஆகியோரின் கீழ் சிறப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
இந்தக் குழு அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி போன்றவற்றுடன் இணைந்து திட்டம் வகுக்கும் பணிகளை மேற்கொள்கிறது. 
கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சிறப்புக் குழு இதே போன்ற ஆய்வை மேற்கொண்டது. அப்போது இந்தக் குழு மேற்கொண்ட செயல்பாடுகளால் போரூர் ஏரியிலிருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் குடிநீரும், சிக்கராயபுரம் குவாரிகளிலிருந்து தினமும் 30 லட்சம் லிட்டர் குடிநீரும் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதேபோன்று இந்த ஆண்டுக்கான குடிநீர் ஆதாரங்கள் பொதுப்பணித் துறை, மத்திய நிலத்தடி நீர் ஆணையம், அண்ணா பல்கலைக்கழகம், கிங் பல்கலைக்கழகம் போன்றவற்றோடு நடத்தப்பட்ட ஆலோசனை மற்றும் கள ஆய்வுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டன. 
புதிய குடிநீர் ஆதாரங்கள் எவை?: போரூர் ஏரி, ரெட்டேரி, மணிமங்கலம், அயனம்பாக்கம், திருநீர்மலை, நேமம், அயப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், தென்னேரி, தையூர், சிட்லபாக்கம், மாம்பாக்கம், அரசன் கழனி, பெரும்பாக்கம், கொரட்டூர்.
கல்குவாரிகள்: சிக்கராயபுரம், எருமையூர், நன்மங்கலம், பம்மல், பல்லாவரம், திருநீர்மலை, நல்லம்பாக்கம் ஆகிய ஏரிகள்- கல்குவாரிகள் சென்னையின் புதிய குடிநீர் ஆதாரங்களாகக் கண்டறியப்பட்டு அவற்றில் தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு கோடி லிட்டர் குடிநீர் வழங்க தயாராகும் ரெட்டேரி!
சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக ரெட்டேரியிலிருந்து தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் பெறப்படவுள்ளது. குடிநீர் வாரியத்தின் சார்பில் ரெட்டேரியில் நிலத்தடி மண், நீரின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அங்குள்ள வெள்ள வடிகால்கள், கழிவுநீர் வடிகால்கள் கண்டறியப்பட்டு சோதிக்கப்பட்டன. பின்னர் ஏரியின் நீர் சுத்திகரிப்பு முறை குறித்து ஐஐடியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
இதையடுத்து பலகட்ட சோதனைகளின் முடிவில் ரெட்டேரி நீரை சுத்திகரித்து நுண்ணுயிர் நீக்கம் செய்து பயன்படுத்தலாம் என பரிந்துரை செய்யப்பட்டது. மேற்கண்ட ஆய்வுகளின் அடிப்படையில் சென்னை குடிநீருக்காக தினமும் ஒரு கோடி லிட்டர் கொள்ளளவில் ரெட்டேரியில் புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.