தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “முதல்வர் விஜய், கடந்த மே 16 ஆம் தேதி திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்துத் திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.
1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ். திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'சி' படிவ உரிம நிபந்தனை 14-ஏ-இன் படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
உள்ளூர் பண்டிகை நாள்கள் அல்லது பொது விடுமுறை நாள்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி. அதாவது நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள், மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல் ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் விஜய், திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர் தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் உள்ளூர் பண்டிகை நாள்கள், பொது விடுமுறை நாள்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும், புதிய திரைப்படம் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் மற்றும் உள்ளூர் பண்டிகை நாள்கள், பொது விடுமுறை நாள்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதி தனியாக பெறத் தேவையில்லை” என முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
Summary
Chief Minister C. Joseph Vijay has issued an order permitting the screening of five daily shows of new Tamil films in all theaters across Tamil Nadu for a period of seven days, starting from the day of their release.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









