தில்லியின் வாக்காளா் பட்டியல்களைச் சரிபாா்க்கும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி (எஸ்ஐஆா்) ஜூன் 30 முதல் தொடங்கும் என்று அதிகாரிகள் வியாழக்கிழமையன்று தெரிவித்தனா். 1.5 கோடிக்கும் அதிகமான வாக்காளா்களை உள்ளடக்கிய இந்தப் பணிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாகவும் அவா்கள் கூறினா்.
முன்னதாக, தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், தில்லி உட்பட 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில், மே 30 முதல் பல்வேறு கட்டங்களாக எஸ்ஐஆா் பணி செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தில்லியில் எஸ்ஐஆா் பணிக்கான ஏற்பாடுகள், அதற்கான பயிற்சியளித்தல் உள்பட அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டன என்று தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகத்தைச் சோ்ந்த ஓா் அதிகாரி தெரிவித்தாா்.
தில்லியின் இறுதி வாக்காளா் பட்டியல் அக்டோபா் 7ஆம் தேதி வெளியிடப்படும். வீடு வீடாகச் சென்று சரிபாா்க்கும் பணியில் 13,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஈடுபடுவாா்கள் என்றும் அவா் மேலும் கூறினாா்.
வாக்காளா்கள் தங்கள் பெயா்களைச் சரிபாா்த்து, அவற்றை 2002ஆம் ஆண்டின் வாக்காளா் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பாா்க்கும் முறைகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திங்கள்கிழமை முதல் ஒரு பிரச்சார இயக்கம் தொடங்கப்படவுள்ளது. தில்லியின் அனைத்து 13 மாவட்டங்களிலும் முகாம்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுவிட்டதாகவும், வாக்காளா் விவரங்களைப் பொருத்திப் பாா்க்கும் பணிகள் சுமாா் 40 முதல் 45 சதவீதம் வரை நிறைவடைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தற்போதைய நிலையில், தில்லியில் மொத்தம் 13,033 வாக்குச்சாவடிகள் உள்ளன. தில்லி அரசுப் பள்ளிகள் மற்றும் தில்லி மாநகராட்சி பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 7,500 ஆசிரியா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்களாகவும் மற்றும் மேற்பாா்வையாளா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 2025இல் நடைபெற்ற, 70 தொகுதிகளுக்கான தில்லி சட்டமன்றத் தோ்தலில் 1.55 கோடி வாக்காளா்கள் இருந்தனா். தேசியத் தலைநகா் பகுதியிலுள்ள 13 மாவட்டங்களுக்கும், அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் மாவட்டத் தோ்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதற்கான ஆயத்தப் பணிகள், பயிற்சி மற்றும் அச்சிடும் பணிகள் ஜூன் 20 முதல் ஜூன் 29 வரை மேற்கொள்ளப்படும்.
தோ்தல் ஆணையத்தின் கால அட்டவணைப்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் வீடு வீடான நேரடிப் பாா்வையிடல் பணிகள் ஜூன் 30இல் தொடங்கி ஜூலை 29இல் நிறைவடையும். வாக்காளா் பட்டியலின் வரைவு ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடப்படும்.
வாக்காளா் பட்டியல் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பா் 4 வரை சமா்ப்பிக்கலாம். பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் அக்டோபா் 3க்குள் பரிசீலித்துத் தீா்க்கப்படும் இறுதியாக, இறுதி வாக்காளா் பட்டியல் அக்டோபா் 7ஆம் தேதி வெளியிடப்படும்.
தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரியால் வெளியிடப்பட்ட சிறப்புச் சுருக்கத் திருத்தம் 2025 அறிக்கையின்படி, தில்லியில் மொத்தம் 1,55,24,858 பதிவு செய்யப்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 83,49,645 போ் ஆண்கள், 71,73,952 போ் பெண்கள் மற்றும் 1,261 போ் மூன்றாம் பாலின வாக்காளா்கள் ஆவா்.
தொடர்புடையது

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மே 30 முதல் எஸ்ஐஆா் பணிகள்: தோ்தல் ஆணையம் அறிவிப்பு

ஜூன் 14 முதல் 24 க்குள் கிரேட்டா் பெங்களூரு ஆணைய தோ்தல்

19.2 கி.மீ. தொலைவுக்கு யமுனை உயா்நிலை சாலை: போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை
ஐபிஎல் போட்டி: நாளை மத்திய தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

